தேர்வு அறையில் நிர்வாண சோதனை.. அவமானம் தாங்காமல் மாணவன் தற்கொலை - ஆசிரியர் கைது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதும் அறையில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்த அவமானம் தாங்காமல் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபால் அருகில் ஹோசன்காபாத் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் காலாண்டு பரீட்சை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் தேர்வு நடந்து கொண்டிருந்த போது, பரீட்சை எழுதிய 10-ம் வகுப்பு மாணவன் மீது ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ஆசிரியர், அந்த மாணவனை எழுந்து நிற்கும்படி கூறி சோதனையிட்டார். பிறகு அந்த மாணவனிடம் பேண்ட்டை கழற்றும்படி உத்தரவிட்டார்.
பரீட்சை அரங்கில் மாணவிகளும் இருந்ததால் அந்த மாணவர் தயங்கினார். இதையடுத்து அந்த ஆசிரியர் மாணவனை அடித்து உதைத்து ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சோதனையிட்டார்.
மற்ற மாணவர்கள் அந்த மாணவரை கேலி செய்தனர். இதனால் மனம் உடைந்த அந்த மாணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை நிர்வாணமாக்கி சோதனை செய்த ஆசிரியரை கைது செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications