யானை சவாரி செய்த மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாப பலி... கேரளாவில்!
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் திருவிழாவின்போது யானை மீது ஏறி அமர்ந்து சவாரி செய்த பிளஸ்டூ மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எளநாடு அருகே உள்ளது மாலாட்டுகுளம். இங்கு வசிப்பவர் உன்னிதாஸ். இவரது மகன் ஜிதின் (17). ஜிதின் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று எளநாடு புலிப்புரம் அய்யப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஐய்யப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஜிதின் தனது தந்தையுடன் யானை சவாரி செய்ய விரும்பினார். அதன்படி தந்தையும், மகனும் யானை மீது ஏறினர். பாகனுடன் 3 பேர் யானை மீது பயணம் செய்தனர்.

இருக்கையின் மீது குடை அமைக்கப்பட்டிருந்தது. யானை செல்லும் வழியில் உள்ள மின் கம்பியை மரதடியால் தூக்கி விட்டவாறு ஜிதின் சென்றார். முக்கிய சாலையில் வந்தபோது மின் கம்பியை தூக்கி விட ஜிதின் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் ஜிதின் உடல் மீது பாய்ந்தது.
இதையடுத்து ஜிதின் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார். அதேசமயம் மர இருக்கையில் அமர்ந்திருந்ததால் மற்றவர்கள் மீது மின்சாரம் பாயவில்லை. யானையும் தப்பியது.
படுகாயம் அடைந்த ஜிதினை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலைக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஜிதின் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications