ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேரக் கிளம்பிய பெண் உள்ளிட்ட 15 ஹைதராபாத் மாணவர்கள்.. தடுத்து மீட்பு
ஹைதராபாத்: ஹைதராபத்தில் ஒரு பெண் உள்பட 15 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றதை ஹைதராபாத் போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர்.
இந்த 15 பேரையும் காணவில்லை என்று அவர்களது பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அவர்களை தீவிரமாக தேடி வந்த போலீஸார், கடைசியில் மேற்கு வங்காளத்தில் பிடிப்பட்டனர்.
அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர். என்று போலீஸ் தவகல்கள் தெரிவித்துள்ளன.

சமூக வலைதள ஆபத்து:
இவர்களுக்கு 23 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருக்கும். சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போனில் உள்ள இணையதள இணைப்பு வழியாக கிடைக்கும் தகவல்களை பார்த்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஈராக் செல்லத் திட்டம்:
இதனால் அவர்கள் எப்படியாவது ஈராக் சென்று அந்த இயக்கத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டனர்.

பெற்றோர் சந்தேகம்:
ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் சில காலமாக சரியில்லாததால் அவர்களது பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர் கண்காணிப்பு:
போலீசாரும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், பெற்றோரையும் தொடர்ந்து தகவல் தரும்படி கூறியிருந்தனர். இந்த நிலையில் 15 பேரும் கொல்கத்தாவுக்கு சென்றனர்.

கொல்கத்தாவுக்கு ஓட்டம்:
அங்கிருந்து ஈராக் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இந்த தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிந்ததும் அவர்கள் போலீசாரிடம் கூறினர். உடனே ஹைதராபாத் போலீசார் கொல்கத்தாவுக்கு விரைந்து சென்று அவர்களை பிடித்து ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தனர்.

எந்தத் தொடர்பும் இல்லை:
அவர்களுக்கு போலீசார் உரிய அறிவுரைகள் வழங்கி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினருடன் எந்த தொடர்பும் கிடையாது. அந்த இயக்கத்தின் மீதான அபிமானத்தால் அதில் சேர கிளம்பியுள்ளனர்.

தவறான பாதை:
சமூக வலைத்தளங்களில் கிடைத்த தகவலை வைத்து அவர்கள் அந்த இயக்கத்தில் சேர திட்டமிட்டுள்ளனர் என்று போலீஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications