• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை எழுப்பும் சந்தேகங்கள்

By Gajalakshmi
|
  ஸ்ரீதேவி மரணமும்..விலகாத மூன்று முடிச்சுகளும்- வீடியோ

  மும்பை : இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாத்டப்பில் முன்கூட்டியே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டது எப்படி, நிதானம் இல்லாத அளவிற்கு குடிக்கும் பழக்கம் உள்ளவரா ஸ்ரீதேவி என்று பல மர்ம முடிச்சுகள் ஸ்ரீதேவி மரணத்தில் விழுந்துள்ளன.

  ஸ்ரீதேவிக்கு 54 வயது என்று சொன்னால் யாரும் எப்படி நம்பமாட்டார்களோ, அப்படித் தான் அவர் உயிர் இழந்த செய்தியையும் பலர் நம்பவில்லை. முதலில் இது வெறும் வதந்தியாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில் உண்மையிலேயே நடிகை ஸ்ரீதேவி துபாயில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரே அறிவித்தனர்.

  stunning Autopsy report of Sridevi raises many questions

  தனது உடல் அழகிலும், ஆரோக்கியத்திலும் மிகவும் அக்கறை கொண்டவராக வலம் வந்த ஸ்ரீதேவியா மாரடைப்பில் உயிரிழந்தார் என்று பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கேட்டனர். இவர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஸ்ரீதேவிக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை.

  திடீர் மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஆக்சிடெண்டல் ட்ரௌனிங் அதாவது எதிர்பாராத மயக்கம் ஏற்பட்டு குளியல் தொட்டிக்குள் நிலைகுலைந்து விழுந்ததில் ஸ்ரீதேவிக்கு அந்த கனமே உயிர் பிரிந்திருக்கலாம் என்று மருத்துவ விளக்கங்கள் கூறுகின்றன.

  துபாய் தடயவியல் துறையின் இந்த அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. ஸ்ரீதேவியை இரவு உணவு சாப்பிட வெளியே செல்லலாம் என்று கணவர் போனி கபூர் கூறியதால் முகம் கழுவ பாத்ரூம் சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்களாகியும் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்த போது அவர் பாத் டப்பில் மயங்கி கிடந்ததாக செய்திகள் வெளிவந்தன.

  நிதானம் இல்லாத அளவிற்கு மது அருந்தி இருந்தவரை அதுவும் பிரபல நடிகை இந்த நிலையில் வெளியே செல்ல ஒப்புகொண்டிருப்பாரா என்பது முதல் சந்தேகம். அவர் இந்த அளவிற்கு மது போதையில் இருந்தது தெரிந்தும் அவரை ஏன் போனி கபூர் வெளியே செல்ல அழைத்தார் என்பது இரண்டாவது சந்தேகம்.

  பாத்ரூம் டப்பில் ஸ்ரீதேவி விழுந்திருந்தால் உடனடியாக அலறல் சிறு சத்தமாவது கேட்டிருக்கும். அப்படி சத்தம் கேட்டு உடனடியாக கதவை உடைத்து பார்க்காமல் 15 நிமிடங்கள் கழித்தே ஸ்ரீதேவி வரவில்லை என்று கதவை உடைத்து பார்த்ததாக சொல்வதும் அடுத்த சந்தேகத்தை கிளப்புகிறது.

  இதில் மற்றொரு பார்க்கப்பட வேண்டிய விஷயம், ஸ்ரீதேவி வெளியே செல்ல புறப்படத் தான் குளியல் அறையில் முகம் கழுவ சென்றார் என்றால் பாத் டப்பில் முன்கூட்டியே தண்ணீர் இருந்தது எப்படி. பொதுவாக பாத்டப்பில் குளிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே தண்ணீர் நிரப்பப்படும் ஆனால் ஸ்ரீதேவி சென்ற சமயத்தில் பாத்டப்பில் தண்ணீர் ரெடிமேடாக நிரப்பி வைக்கப்பட்டதன் மர்மமும் புரியவில்லை.

  மற்றொரு புறம் இறப்புக்கான காரணம் மயக்கம் என்று பிரதே பரிசோதனை அறிக்கை சொல்கிறது. மயங்கி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்கிறார் ஸ்ரீதேவி அதனால் மூச்சுத்திணறல் என்று கூறினாலும் அறிக்கையில் தற்செயலான என்ற வார்த்தை எப்படி பிரேத பரிசோதனை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  lok-sabha-home

   
   
   
  English summary
  Twist in autopsy report of Sridevi says she was not died of massive cardiac arrest rather it is accidental drowing raises many questions in her death

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more