அமித்ஷா பங்கேற்கவில்லை... சு.சுவாமி ஹேப்பி... அதிகாரப்பூர்வமானதில்லை என சுவாமிக்கு பாஜக ஷாக்!
Recommended Video

டெல்லி: கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். எனினும் இவர் கருத்து அதிகாரப்பூர்வமானதில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவால் மரணமடைந்தார். இவரது சமாதியில் தினந்தோறும் திமுகவினர், மக்கள் என சாரை சாரையாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 30-ஆம் தேதி கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல முக்கிய தலைவர்கள் வர உள்ளனர். எல்லா மாநிலத்திலும் உள்ள முக்கிய தலைவர்களை அழைக்க ஸ்டாலின் அழைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது. அதுபோல் காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பங்கேற்கிறார்.
Happy to learn that Party President Amit Shah has decided not to attend the DMK meet.
— Subramanian Swamy (@Swamy39) August 24, 2018
அமித்ஷா பங்கேற்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை.
அவர் அக்கூட்டத்தில் பங்கேற்காததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பாஜகவின் ஊடக பிரிவு கூறுகையில் அமித்ஷா திமுக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று சுப்பிரமணிய சுவாமி பதிவு செய்துள்ளது பாஜகவின் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications