அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மோடி ஆட்சி கவிழும்! ரகசியம் சொல்லவா? சுப்பிரமணியன் சாமி ஒரே போடு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையைச் சமன் செய்தார்.
இந்த 18ஆவது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் மோடியுடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் தனித்தனியே செய்துவைத்தார்.

பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 சீட்டுகள்தான் கிடைத்தன. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. அப்போதுதான் தனித்து ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால், இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
ஆகவே, பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 293 சீட்டுகளைப் பெற்றதால், ஆட்சியமைக்க உரிமை கோரியது. அதனடிப்படையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஆட்சியமைக்க வருமாறு என்.டி,ஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
அதனடிப்படையில் நேற்று மோடி உள்ளிட்ட 72 அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பாஜக ஆட்சி அமைத்திருக்கவே கூடாது. எதிர்க்கட்சியாகக் கொஞ்சக் காலம் அமர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விட்டிருக்க வேண்டும். அந்த ஆட்சி கொஞ்ச நாளில் கவிழ்ந்து இருக்கும். அதன் பின்பாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். நான் இதை விமர்சிக்கிறேன். ஆகவேதான், அவரது அமைச்சரவையில் ஜால்ரா போடுகின்றவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டுள்ளார். நான் மோடியின் தலைமையை ஏற்கவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அதை இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது. நான் தான் முதலிலிருந்தே பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லி வந்தேன். அதைப்போல இப்போது 240தான் கிடைத்துள்ளது.

எனது கணிப்புப் படி இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும். அதற்கு இந்த அரசு மேல் தாக்குப் பிடிக்காது. பாஜகவை சில விசேச கொள்கைகளுக்காக உருவாக்கினோம். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் வந்த பிறகு எப்படி இந்தத்துவாவைப் பற்றிப் பேச முடியும்? அதைப் பேச இவர்களுக்கு இப்போது தைரியம் இருக்குமா? ஆகவே, பேச மாட்டார்கள்.
அப்படிப் பேசினால், இந்த இருவரும் கூட்டணியை விட்டுச் சென்றுவிடுவார்கள். காங்கிரஸ் அழைத்தால் நிதிஷும் நாயுடுவும் போய் விடுவார்கள். தேர்தலுக்கு முன்பாக நாயுடு காங்கிரஸ் கூட்டணியில்தானே இருந்தார். அப்புறம் பல்டி அடித்து பாஜகவுக்கு வந்துவிட்டார். இப்படி ஒரு கொள்கை இல்லாமல் அரசியல் செய்யக் கூடாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications