நான் பாஜகவின் செயற்குழு சிறப்பு அழைப்பாளர்- என் கருத்தை தமிழிசை நிராகரிக்க முடியாது: சு.சுவாமி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நான்.. என்னுடைய கருத்தை மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான தமிழிசை சவுந்திரராஜனால் நிராகரிக்க முடியாது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்யும்படி நான்தான் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு யோசனை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.

தமிழிசை கண்டனம்
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேட்டிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு உரிமை இல்லை
ஆனால் சுப்பிரமணியன் சுவாமியோ, பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில் எனது கருத்தை நிராகரிக்கும் உரிமையும், அதிகாரமும் மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இல்லை. மேலிடத் தலைவர்கள்தான் இது பற்றிப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

நழுவிய முரளிதரராவ்
இது குறித்து தமிழகத்துக்கான பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான முரளிதர ராவிடம் சுவாமியின் பேட்டி குறித்து செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நான் முக்கியமான அலுவலில் ஈடுபட்டுள்ளேன். இது பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்றார். மீண்டும் அவரது செல்போனைத் தொடர்பு கொண்டபோது, பின்னர் பேசுகிறேன் எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

பம்மும் லலிதா குமாரமங்கலம்
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் லலிதா குமாரமங்கலம் இது பற்றி கூறுகையில், சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சூழ்நிலைகளில் சில கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவரது பேச்சு குறித்து மேலிடத் தலைவர்களுடன் கலந்து பேசாமல் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications