For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையாது: சு. சுவாமி சூசகம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் தற்போது உள்ள நிலை நீடித்தால் நிலையான ஆட்சி நடக்காது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.,.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 40 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் 'என்னை கட்டாயப்படுத்தியதால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் எனக் கூறினார்.

subramanian swamy twitter about on admk

இதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொருளாளர் பதவியைப் பறித்தார் சசிகலா. அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் நீடித்தால், தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைவது கடினம்." என தெரிவித்துள்ளார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்றிரவு சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
if this in fighting continues in AIADMK then no stable govt is possible says bjp senior leader subramanian swamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X