தி.க.வை தடை செய்க.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருக: சு.சுவாமி ஆக்ரோஷம்
டெல்லி: பிராமணர்கள் மீது, தி.க.வினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறி கண்டித்துள்ள பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்காக, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்று எச்சரிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில், பிராமணர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து சு.சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

பிராமணர்கள் வீடு புகுந்து, தி.க.வினர் தாக்குதல் நடத்தி, புனித நூலை (பூணூல்) அறுத்தெறிந்துள்ளனர். இந்து மத சின்னம் மீதான தாக்குதல் இது. இதுபோன்ற தாக்குதல்கள் நடக்க காரணம், தமிழகத்தில் திறமையற்ற ஆட்சி நடப்பதுதான்.
Having got confirmation I am issued a Press Release to demand a ban on Dravida Kazhagam or dismissal of the TN Govt if they fail to act
— Subramanian Swamy (@Swamy39) April 21, 2015 எனவே, இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அரசியல் சாசன பிரிவு 256ன்கீழ் தமிழக அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்ற உறுதியான எச்சரிக்கையை மத்திய அரசுவிடுக்க வேண்டும்.
மேலும், தி.க அமைப்பை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆனால், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட 6 பேரும், தி.கவினர் இல்லை, திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications