மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ1.50 காசுகள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை சர்வதேச சந்தையில் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நேரடியாக மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் விமான எரிபொருளின் விலை ரூ.3.025 அதிகரித்துள்ளது. அதேபோல் சமையல் எரிவாயுவின் விலையும் ரூ.1.50 அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் மானியத்தை நீக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் சிலிண்டரின் விலை மாதந்தோறும் உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
டெல்லியில் ரூ.487.18-ஆக விற்கப்பட்ட சிலிண்டரின் விலை இனி ரூ.488.68-ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications