For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நடுங்குதே".. இளைஞருக்கு ஒரே ஒரு முத்தம் தந்த பெண்.. ஒரு நாடே ஆவேசமாகிடுச்சே.. அதுக்குன்னு இப்படியா

இளைஞருக்கு முத்தம் தந்ததற்காக 6 மாத ஜெயில் தண்டனை பெற்றுள்ளார் சூடான் பெண்

Google Oneindia Tamil News

கார்டூம்: இளைஞர் ஒருவருக்கு முத்தம் தந்ததற்காக மரண தண்டனை பெற்றார் 20 வயது இளம்பெண் ஒருவர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது என்ன தெரியுமா? சூடானில் நடந்த சம்பவம் உலக மக்களின் கவனத்தையும் திசை திருப்பி உள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூடான்.. இது மிகப்பெரிய நாடு.. அதாவது, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், ஆப்பிரிக்க கண்டத்திலேயே சூடான், பெரிய நாடாகும்..

இந்த நாட்டினர் பெரும்பாலும் இஸ்லாத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.. அதனால், ஒழுக்கக்கேடான விஷயங்கள் நடந்தால், தண்டனைகள் என்பது அதிகமாகவே கிடைக்கும்..

பித்தரை சித்தராக மாற்றி.. கல்லா கட்டிய கரூர் கும்பல்! இப்போ ஆளே மாறி எப்படி இருக்கார் பாருங்களேன்! பித்தரை சித்தராக மாற்றி.. கல்லா கட்டிய கரூர் கும்பல்! இப்போ ஆளே மாறி எப்படி இருக்கார் பாருங்களேன்!

கல்லெறி தண்டனை

கல்லெறி தண்டனை

முக்கியமாக கல்லெறி தண்டனைகள் இங்கு அதிகம் உண்டு.. பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கல்லெறி தண்டனைகள் இங்குள்ள ஹைகோர்ட்களில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. அதேசமயம், சூடானில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. இஸ்லாமிய நாடு என்பதாலும், பல்வேறு குற்றங்களுக்கு கை, கால்களை வெட்டுதல், கல்லால் அடித்து மரண தண்டனை வழங்குதல் போன்ற கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

ஒயிட் நைல்

ஒயிட் நைல்

குறிப்பாக திருமணம், உறவு சார்ந்த ஒழுக்கம் சார்ந்த விவகாரங்களில், கறாரான சட்ட விதிகள் தண்டனைகள் வழங்கப்படும். யாராவது திருடிவிட்டாலோ, அல்லது விபச்சாரம் செய்தாலோ, அவர்களுக்கு கை மற்றும் கால்கள் துண்டிக்கப்படும்.. பொது இடங்களில் கல்லால் அடித்து மரணம் என்ற கொடுமையான தண்டனைகளும் வழங்கப்படும்.. இப்படிப்பட்ட சூழலில், 20 வயது பெண் ஒரு புகாரில் சிக்கி உள்ளார்.. இந்த நாட்டில் ஒயிட் நைல் என்ற மாகாணத்தை சேர்ந்தவர் அந்த 20 வயது பெண்.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால், விவாகரத்து பெற்றவர்.. இவர் ஒரு இளைஞருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்..

முத்தமிட்ட பெண்

முத்தமிட்ட பெண்

ஒருநாள் இந்த பெண், இளைஞருக்கு முத்தம் தந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.. இதை அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணாலேயே பார்த்துவிட்டனர்.. அப்பறம் என்ன? அந்த இளைஞரை அடித்தே கொன்றுவிட்டனர்.. திருமணமான பெண் அல்லது திருமணமாகி கணவரை பிரிந்த ஒரு பெண், இன்னொரு ஆணுடன் நெருக்கமாக இருக்கக்கூடாது என்பதால், இந்த பெண்ணின் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டது... இந்த வழக்கை விசாரித்த கோஸ்டி நகரில் உள்ள கோர்ட், அந்த பெண்ணிற்கு பொது வெளியில் கல்லால் அடித்து கொலை செய்யும்படி மரண தண்டனை விதித்தது.

ஆபாச செயல்

ஆபாச செயல்

ஆனால், இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வெடித்தன.. இதையடுத்து, அந்த தண்டனை வாபஸ் பெறப்பட்டு, வழக்கும் மறுவிசாரணை செய்யப்பட்டது.. அந்த விசாரணையில் அந்த பெண், ஆணுடன் நெருக்கமாக இருந்ததையும் முத்தமிட்டதையும் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார்... இதனையடுத்து தலைமை நீதிபதி குற்றச்சாட்டை "விபச்சாரம்" என்பதிலிருந்து "ஆபாசமான செயலாக" மாற்றி அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தார்.. இதுபோன்ற குற்றத்துக்கு, சூடான் சட்டத்தில் கசையடி, கை கால்களை வெட்டுதல், தூக்கிலிடுதல், கல்லெறிந்து கொல்லுதல், இப்படி தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.. இதில் இருந்தெல்லாம் தப்பித்து, இந்த பெண் 6 மாத தண்டனையை பெற்று ஜெயிலுக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது..!!

English summary
Sudanese woman jailed for kissing man, what happened actually
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X