For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரும்புப் பெண்மணிக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி செலுத்திய சிற்ப கலைஞர்

ஒடிசா சிற்ப கலைஞர், ஜெயலலிதாவுக்கு மணல் சிற்பம் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பூரி: ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஜெயலலிதாவின் முகத்தை மணல் ஓவியமாக உருவாக்கி தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 Sudarsan Pattnaik's tribute to Jayalalithaa

அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஜெயலலிதா உடல் தங்க பேழையில் வைக்கபட்டு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வண்டியில் ஊர்வலமாக எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒடிஷா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். அந்த சிற்பத்தில் ' இரும்புப் பெண்மணிக்கு அஞ்சலி' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
Sand sculptor Sudarsan Pattnaik tribute to Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X