சுனில் ஜோஷி கொலை வழக்கு: சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
தேவாஸ்: ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகரும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியுமான சுனில் ஜோஷி படுகொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 28-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி. இவர் மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2007 டிசம்பர் 29-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்தது. அதில் சுனில்ஜோஷி படுகொலைக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை; ஆனால் பெண்துறவி சாத்வி பிரக்யாவிடம் தவறாக நடக்க முயன்றதால் சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சாத்வி பிரக்யா, மகாராஷ்டிராவின் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகாலம் நடைபெற்று வரும் இந்த சுனில் ஜோஷி படுகொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் மீது தேவாஸ் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ந் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை தொடங்க உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications