'கேப்டன்' விஜயகாந்தின் திட்டம் தான்... ஆந்திராவில் வீட்டுக்கு வந்து ரேஷன் பொருட்கள் சப்ளை
Recommended Video
அமராவதி: நாட்டிலேயே முதன் முறையாக ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை ஆந்திர அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து பல அதிரடி முடிவுகளையும் அவர் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.

அந்த வகையில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க, விரும்பும் பொருட்களை தொலைபேசியில் தெரிவித்தால் வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.
இம்முறை செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் ஆலோசிக்கப்பட்டதாகவும், ரேஷன் கடைகளில் உள்ள முறைகேடுகளை ஒழிக்க இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமைச்சர்கள் ஏதேனும் தவறு, முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் கட்சி பதவியிலிருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் கடைகளில் நிலவும் ஊழலை களைந்து மக்களின் வீடு தேடி அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இதற்காக அவர்களிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்கும் காலம் இனி மலையேறிவிடும் என கடந்த தேர்தல்களில் கனவு திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் களப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications