'உயிருள்ளவரை தமிழுக்கு குரல் கொடுப்பேன்' - தருண் விஜய் எம்பி

நேற்று மாநிலங்களவையில் தமிழ் மொழியின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய தருண் விஜய், தமிழை வட மாநிலங்களில் விருப்பப் பாடமாகக் கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதியை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மீது இத்தனைப் பற்று கொண்டுள்ள தருண் விஜய், தன் தமிழ்ப் பற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறியுள்ளார்:
"உலகின் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதை எனது வாழ்வின் சிறந்த தவமாகக் கருதுகிறேன். அந்த அளவுக்கு தமிழையும், தமிழ் படைப்புகளையும் நான் காதலிக்கிறேன்.
நான் தமிழ் மீது கொண்டுள்ள ஈர்ப்பு, நான் வாழும் காலத்தில் அதற்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
எனது விருப்பத்துக்கு எந்தத் தடையும் யாரும் விதித்ததில்லை. அதனால், உயிருள்ளவரை தமிழுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்!
வட மாநில மக்கள் தமிழைக் கற்க வேண்டும். தமிழ் மொழியில் உள்ள சிறப்புகளை அறிய வேண்டும் என்பதே என் ஆசை. தமிழ் மக்களை இந்தி கற்கச் சொல்லும் முன், வட மாநிலத்தவர் தமிழ் கற்க ஆரம்பிக்க வேண்டும், என்பதுதான் நான் சொல்வது," என்றார்.
தருண் விஜய் இதற்கு முன் ஆர்எஸ்எஸின் பஞ்சஜன்யா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இவருக்கு தமிழ் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ட்விட்டர் பக்கத்திலும், தமிழ் மொழிக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் தருண்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications