அவதூறு வழக்கு சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்தும் ஆட்சியாளர்கள்... உச்ச நீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அவதூறு வழக்கு சட்டப் பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தொடரும் வழக்குகள் வருத்தமளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது தொடரபட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

supreme court

அவதூறு வழக்குகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சட்ட வல்லுநர் குழுவின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா நேற்று தனது வாதங்களை முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆட்சியாளர்களுக்கு சாதகமான அவதூறு சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசு தரப்பு வழக்கறிஞர் மூலம் தொடுக்கப்படும் அவதூறு வழக்குகள், வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார்.

தேவையில்லாமல் அவதூறு வழக்குகள் போடப்படுவதாகவும், அரசியல் காழ்புணர்ச்சியால் ஆட்சியில் இருப்பவர்கள் வழக்கு தொடர்வதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அரசு வழக்கறிஞர்கள் மூலம் அவதூறு வழக்குகள் வாதாடுவதால் தொடர்நது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது.

அதே போன்று தனிநபர் பேச்சுரிமைக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வருத்தமளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+