உச்சநீதிமன்ற உத்தரவை மதித்தே ஆக வேண்டும்.. காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு நீதிபதிகள் சாட்டையடி!
டெல்லி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா சரியாக நிறைவேற்றவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர். உடனே விசாரிக்க கோரிக்கை அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மீண்டும் வலியுறுத்தல் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இன்று விசாரணை இதன்படி திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் கர்நாடகா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
நீதிபதிகள் கூறியது: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூறிய உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா உரிய வகையில் செயல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவிட்டால் நாட்டு மக்களும், அரசு அதிகாரிகளும் அதை செயல்படுத்தியே தீர வேண்டும். அந்த உத்தரவு நீதிமன்றத்தால் மாற்றப்பட்டால் தவிர, உத்தரவை மதிக்க வேண்டிய கடமை அனைத்து தரப்புக்கும் உள்ளது.
ஒருமுறை கோர்ட் ஆர்டரை பிறப்பித்துவிட்டால் அதை நிறைவேற்ற வேண்டும், அல்லது அதை மாற்றியமைக்க மனு செய்யலாம். இவ்விரு வாய்ப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. அதை தவிர்த்துவிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சட்டம்-ஒழுங்கை தங்கள் கைகளில் எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கர்நாடகா தரப்பை கண்டித்தனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications