தூக்குக்கு தடை கோரிய யாகூப் மேமன் மனு மீது நாளை விசாரணை- உச்சநீதிமன்றம்
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி குற்றவாளி யாகூப் மேமன் தாக்கல் செய்த புதிய நிவாரணம் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
1993-ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நடத்தப்பட்ட முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே குற்றவாளி யாகூப் மேமன். இவரது தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கருணை மனுவையும் ஜனாதிபதி தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்திருந்தார். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் யாகூப் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் வரும் 30-ந் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநருக்கு ஒரு கருணை மனுவை அனுப்பி வைத்துள்ளார் யாகூப். அத்துடன் தம்மை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும் அவர் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
-
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications