போராட்டம் தொடரும்.. உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில்.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்தது. எனினும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மேற்குவங்கத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொல்கத்தா போலீசாருக்கு காட்டமான கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்றும் நடைபெற்றது. அப்போது, சிபிஐ தரப்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது எனவும் மாநில அரசு உறுதி அளித்தது. இதையடுத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்,
மேற்குவங்கத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது: என்று கூறியது.
இந்தநிலையில், போராட்டத்தை கைவிட மாட்டோம் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் விதித்த கெடு தொடர்பாக பேசிய பயிற்சி மருத்துவர்கள், இந்த போராட்டம் என்பது மக்கள் இயக்கம்.. இதை மாநில அரசோ, உச்ச நீதிமன்றமோ மறக்க கூடாது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றுள்ளது. மாநில போலீசிடம் இருந்து சிபிஐக்கு விசாரணை சென்றுள்ளது. ஆனால், நீதி என்பது இன்னும் கிடைக்கவில்லை. சுகாதார அமைப்பை சீர்குலைந்துள்ளதாக மாநில அரசு கூறியது தவறானது" என்று பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications