மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
டெல்லி: மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த மே 1-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளித்து கடந்த மே 24-ம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி, சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் அனில் ஆர்.தாவே, சிவ கீர்த்தி சிங் மற்றும் ஆதர்ஷ் கோயர் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், 50 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நிலையில் நீதிமன்றம் தலையிட்டால் மேலும் குழப்பம் ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நாடு முழுதும் 17 மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மாணவ மாணவியர் நுழைவு தேர்வு எழுதியுள்ள நிலையில் தற்போது அவசரச்சட்டத்துக்கு தடை விதித்தால் அது பெரும் குழப்பத்தில் கொண்டு போய் விடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications