புதிய புயல் உருவாகிறது- வக்பு வாரிய சடத்துக்கு எதிரான வழக்குகள்- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. வக்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தவெக உள்ளிட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.

முஸ்லிம்களின் வக்பு சொத்துகளை நிர்வகிக்கக் கூடியது வக்பு வாரியம். வக்பு வாரியத்தை நிர்வகிப்பதற்கான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து பரிந்துரைகளும் நீக்கப்பட்டு, ஆளும் கூட்டணி கட்சிகளின் பரிந்துரைகள் மட்டும் ஏற்கப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபா, ராஜ்யசபாவில் மிக கடுமையான ஆக்ரோஷமான விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே இந்த சர்ச்சைக்குரிய வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். இதனால் வக்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், நடிகர் விஜய்யின் தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த பின்னணியில்தான் உச்சநீதிமன்றத்தில், வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications