அவதூறு இல்லாமல் பேசலாமே.. அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
டெல்லி: கிரிமினல் அவதூறு வழக்கு தொடரும் நடைமுறைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிரிமினல் அவதூறு தொடர்பான, இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள், 499, 500 ஆகியவற்றை நீக்க வேண்டுமென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக எம்.பி, சுப்ரமணியன் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவதூறு வழக்கு என்பது, அரசியல் சாசன சட்டப் பிரிவு 19(2)-க்கு எதிரானது, பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த தமிழக அரசு, இந்திய குற்றவியல் சட்டத்தில், கிரிமினல் அவதூறு சட்ட வழிவகைகள் அவசியம் தேவை. பொதுவாழ்வில் ஈடுபடுபவரின் புகழ், கவுரவத்தை காப்பதோடு, பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 19(2)ல் பேச்சுரிமை என்பது அவதூறு தன்மை அல்லாத பேச்சுரிமையைத் தான் குறிக்கிறது. எனவே இந்த அவதூறு சட்டங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ஐ மேற்கோள்காட்டி, அடுத்தவர் மனம் காயப்படும்படியும், அடுத்தவர் மாண்பினை சீர்குலைக்கும் வகையிலும் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும் அவதூறு எனவே, கிரிமினல் அவதூறு வழக்கு சட்ட நடைமுறைகள் சரியானதே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications