இதென்ன அதிசயம்? கேஷூவலா.. சுடுகாட்டிலிருந்து எழுந்து வந்த பெண்.. தெறித்த கூட்டம்.. கடைசியில டுவிஸ்ட்
புவனேஸ்வர்: கல்லறையில் ஒரு பாட்டி திடீர்னு கண் திறந்துட்டாங்க.. மொத்த பேரும் பதறி அடித்து ஓடிவிட்டார்கள்.. என்னாச்சு தெரியுமா?
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்திலுள்ளது பெர்ஹாம்பூர் என்ற நகரம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த பாட்டி.. கடந்த பிப்ரவரி 1ம் தேதி, தன்னுடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாராம்.

தீப்பிடிப்பு: ஸ்டவ் அருகே நின்று சமைத்து கொண்டிருந்தபோது, அப்போது எதிர்பாராதவிதமாக, தீப்பிடித்து கொண்டது.. இதனால், அந்த பெண்ணின் உடையிலும், தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.. இதனால் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டனர்.
ஆனாலும், உடம்பெல்லாம் தீப்பிடித்ததில், கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேல் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.. அதனால், மருத்துவமனையில் கொண்டுபோய் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.. பிறகு, மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொன்னார்கள்.
சிகிச்சை: ஆனால், உயர் சிகிச்சை அளிப்பதற்கு, பாட்டியின் கணவரிடம் பணம் இல்லை.. அதனால், வேறு வழியின்றி வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். தன்னால் முடிந்த அளவு வீட்டிலேயே சிகிச்சையையும் தந்தார். ஆனால், பாட்டிக்கு தீக்காயம் ஆறவேயில்லை.. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது.. கடந்த திங்கட்கிழமை காலை, பாட்டிக்கு அசைவேயில்லை..
இதனால், உறவினர்களுக்கு தகவல் தந்த கணவர், உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.. அந்த ஊர் மக்களும், உறவினர்களும் பாட்டியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் குடும்பத்தில் சடலத்தை எரிப்பது வழக்கம் என்பதால், உடலை எரியூட்டுவதற்கான வேலைகள் ஆரம்பமாயின..
சடலம்: சடலத்தை எரிக்க கொண்டு செல்லும் நேரத்தில் டக்கென கண்ணை திறந்துவிட்டார் பாட்டி.. இதைப்பார்த்து உறவினர்கள் அலறியடித்து ஓடினார்கள்.. எனினும், அவரது அருகில் சென்று பேச்சு தந்தார்கள்.. பாட்டியும் பதிலுக்கு பேசினார்.. பாட்டிக்கு உயிர் வந்ததோ இல்லையோ? அங்கிருந்த அனைவருக்கும் அப்போதுதான் உயிரே வந்தது.
இதனால் உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். இந்த குழப்பத்துக்கு இன்னொரு காரணமும் உள்ளது. மருத்துவ சான்றிதழ் இல்லாமலேயே உடலை எரியூட்டலாம் என பெர்ஹாம்பூர் மாநகராட்சி புதிய விதியை அமல்படுத்தியிருந்தது. அதன்படிதான், பாட்டியை நேராக கல்லறைக்கு தூக்கி சென்றுவிட்டார்கள்.
கல்லறையில் அடக்கம்: ஒருவேளை, பாட்டி இறந்ததை டாக்டர்கள் யாராவது பரிசோதித்து உறுதிப்படுத்தி, மருத்துவ சான்றிதழும் தந்திருந்தால் இப்படி ஒரு குழப்பம் ஏற்படாது. கல்லறையில் அடக்கம் செய்யும் நேரத்தில், பாட்டி கண் விழித்தது ஒடிசாவில் பெரும் பரபரப்பை தந்துவிட்டது. இப்போது பாட்டிக்கு ட்ரீட்மென்ட் நடக்கிறது. இந்த ட்ரீட்மென்டை முதலிலேயே தந்திருக்கலாம் போல..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications