மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம்: சுஷ்மா
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று லோக்சபா மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
லோக்சபா இன்று விவாத நேரத்தின்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "பெண்களுக்கான சம உரிமை குறித்து அனைத்து கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் அதனை நிறைவேற்ற முனைப்புடன் இருப்பது பாஜகதான்.
குஜராத்தில் ஒரு பெண்ணை முதல்வராக்கினோம், அவையிலும் பெண்களுக்கு 25% பங்கு வழங்கப்பட்டுள்ளது. நமது அவைத் தலைவர் கூட பெண் தான்.

நான் இப்போது இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவெற்றும்போது, அதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இந்த மசோதாவிற்கு பாஜக ஆதரவு அளித்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள கூடாது என்று, நாட்டில் நடந்து வரும் சில மோசமான சம்பவங்கள் நமக்கு உணர்த்துக்கின்றன. இது போன்ற வன்முறைகளை ஒடுக்க பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு உதவிபுரியும்" என்று சுஷ்மா அவையில் பேசினார்.












Click it and Unblock the Notifications