வி.வி.எஸ். லட்சுமணின் வங்கிப் பணம் ரூ. 10 லட்சம் திருட்டு.. கொல்கத்தாவில் ஒருவர் கைது!
கொல்கத்தா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை முறைகேடாக திருடியதாக கொல்கத்தாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக 32 வயதான இஸாசுல் ஷேக் என்ற நபரை மால்டாவில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர், வி.வி.எஸ். லட்சுமண கணக்கில் உள்ள ரூ. 10 லட்சம் பணத்தை மோசடியாக எடுத்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

இவரை தங்களது காவலில் எடுக்க ஹைதராபாத் போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.
சால்ட்லேக் வங்கிக் கிளையில் ஷேக்குக் கணக்கு உள்ளது. இந்த கணக்கில் நீண்ட காலமாகவே பரிவர்த்தனை நடக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் புதன்கிழமையன்று திடீரென ரூ.10 லட்சம் அவரது கணக்கில் முதலீடு செய்யப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் பிதாத் நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸாரின் உதவி நாடப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர காவல் துறையிடமிருந்து பிதாத்நகர் போலீஸாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், வி.வி.எஸ் லட்சுமண் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை சிலர் எடுத்து சால்டேல்கே வங்கிக் கிளையில் டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஷேக் மீதான சந்தேகம் உறுதியானது. இதையடுத்து ஷேக்கை வங்கி நிர்வாகம் அழைத்தது. அவர் வங்கிக்கு வந்தபோது அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
லட்சுமண் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை ஷேக் தனது கணக்குக்கு மாற்றியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், ஷேக் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
அவருக்கு மேலும் என்னென்ன மோசடிகளில் தொடர்பு உள்ளது என்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications