நடத்தையில் சந்தேகம்: நெற்றியில் ஆணி அடித்த கணவர்- கோமாவில் மனைவி
டெல்லி: டெல்லியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவரது நெற்றியில் 5 இன்ச் ஆணியை அடித்துவிட்டார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு. அவரது மனைவி மம்தா(27). அவர்களுக்கு 3 குழந்தைகள். இந்நிலையில் பப்புவுக்கு மம்தாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாக பப்பு நினைத்தார். இதனால் கடந்த வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த பப்பு மம்மதாவின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு நெற்றியில் 5 இன்ச் ஆணியை அடித்தார். ஆணியின் பாதிப் பகுதி மம்தாவின் நெற்றிக்குள் இறங்கியவுடன் அவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் வந்து மம்மதாவின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயின் அருகில் அமர்ந்து இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தனர்.
காலையில் வீட்டு உரிமையாளர் குழந்தைகள் 3 பேரும் அழும் சத்தம் கேட்டு வந்து மம்மதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். கோமாவில் இருக்கும் மம்மதாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பப்புவை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications