அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்த கணவர்.. அலறி துடித்த மனைவி.. கொடூரனுக்கு போலீஸ் வலைவீச்சு..!
மனைவியின் உறுப்பை ஊசியால் தைத்துள்ளார் கணவர்
போபால்: மனைவியின் அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் ஒரு கொடூர கணவர்..!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது..
இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது. வடமாநில பெண்களின் நிலைமை பரிதாபத்தை கூட்டிவருகிறது.. கணவன்மார்களிடம் சிக்கி சீரழியும் அந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது..

கணவன்
இப்படித்தான், உத்திரபிரதேசம் மாநிலம் கவுஸ் சாம்பி போலீஸ் ஸ்டேஷனில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் கணவன் மீது புகார் தந்திருந்தார்.. அதாவது, தனக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையிலும், தன்னுடைய கணவர் தொடர்ந்து தன்னை வலுக்கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்து வருவதாகவும், அடித்து காயப்படுத்துவதுடன் தனது பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமை செய்வதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

கொடுமை
இப்போது மத்திய பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. சிங்க்ராலி மாவட்டத்தில் மடா என்ற கிராமம் உள்ளது.. இங்கு 55 வயதான நபர் வசித்து வருகிறார்.. இவரது மனைவிக்கு 35 வயதாகிறது.. மனைவி மீது அந்த கணவனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது..

கள்ள உறவு
அதே ஊரில் உள்ள ஒருவரோடு மனைவிக்கு கள்ள உறவு இருப்பதாக கணவனுக்கு சந்தேகம் அதிகமாகி கொண்டே வந்துள்ளது.. இதனால் மனைவியுடன் தகராறு செய்து அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்... தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று அந்த பெண் தினந்தோறும் கதறியும், கணவன் கேட்கவில்லை. மனைவியின் பேச்சை நம்ப மறுத்தார்.

தகராறு
அதனால் தம்பதிக்குள் சண்டை அதிகமானது.. அப்படித்தான் சம்பவத்தன்றும் தகராறு வெடித்துள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கயிறுகளால் இறுக கட்டிப்போட்டார்.. பிறகு ஒரு ஊசியை எடுத்து வந்து, மனைவியின் அந்தரங்க உறுப்பு பகுதியை தைத்து விட்டார்.. அதற்கு பிறகும் ஆவேசம் குறையாமல், மனைவியை ஒரு ரூமில் போட்டு அடைத்து கொடுமைப்படுத்தினார்...

கைது
அந்த பெண் வேறுவழியில்லாமல் அங்கிருந்து தப்பி வந்து அங்குள்ள ஸ்டேஷனில் கணவன் மீது புகார் கொடுத்தார்... "கணவனை கைது செய்ய வேண்டாம், நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க, வேணும்னா நல்லா திட்டுங்க சார்" என்று போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. ஆனால், மனைவி போலீசுக்கு போன தகவல் அறிந்ததுமே கணவன் தப்பியோடி விட்டார்.. அவரை இப்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.. உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவ பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்துள்ளனர்..

மனைவி
இதேபோல ஒரு கொடூரமான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் இந்த மாத துவக்கத்தில் நடந்தது.. ராம்பூர் மாவட்டத்தில் உள் மிலக் பகுதியில் டிரைவராக பணிபுரியும் கணவர், தன்னுடைய மனைவிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகப்பட்டு இதுபோலவே கொடுமையை செய்தார்.. ஆனால், அந்த வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அதுபோலவே நடந்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications