நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து போட்டி: சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்.. களைகட்டப்போகும் ஆட்டம்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, ஹால்டியாவில் உள்ள துணை பிரிவு அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி சமீபத்தில் பாஜகவில் இனைந்தார். ''மம்தா தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடட்டும்'' என்று அவர் சவால் விடுத்தார்.

மம்தா மீது தாக்குதல்
இந்த சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் களம் இறங்குவதாக அறிவித்தார். சுவேந்து அதிகாரியும்-மம்தாவும் நந்திகிராமில் நேரடியாக மோதுகின்றனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதி என்றும் சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன் என்றும் மருத்துமனையில் இருந்தபடி காலில் கட்டுப் போட்ட நிலையில் உருக்கமுடன் தெரிவித்தார் மம்தா.

நாடகமாடுகிறார்
ஆனால் இந்த தாக்குதலை மறுத்துள்ள மேற்கு வங்க பாஜக, ''ஒரு சிறு விபத்தை பெரிய சம்பவம்போல் வெளிக்காட்டி, அனுதாபத்தை வெளிப்படுத்தி மம்தா ஓட்டுகளை வாங்க பார்க்கிறார். தேர்தலுக்காக மம்தாவும், பிரசாந்த் கிஷோரும் செய்த திட்டமிட்ட நாடகம்தான் இது''என்று சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, இன்று ஹால்டியாவில் உள்ள துணை பிரிவு அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோருடன் தொண்டர்கள் புடைசூழ சுமார் 1 கி.மீ பேரணியாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் இதே நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 67 சதவீத வாக்குகளைப் பெற்று, சுமார் 81,230 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications