குஜராத்தில் தீயாய் பரவும் பன்றிக்காய்ச்சல்: பலி 71 ஆக உயர்வு – 70 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஐ தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பல மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், ஹரியானா மாநிலத்தில் அமைச்சர் வரை தாக்கம் இருந்தது. தெலுங்கானாவில் நூற்றுகணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

Swine flu death toll reaches 71 in Gujarat; 5 deaths on Sunday

குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அகமதாபாத், கட்ச், சூரத் பகுதிகளில் பன்றிக்கசாய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி முதல் 627 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கம் இருந்துள்ளது. பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்ச் பகுதியில் 199 பேர் பாதிக்கப்பட்டு 25 பேர் பலியாகியிருக்கின்றனர். அமதாபாத்தில் 105 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளோரின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது.

மாநில சுகாதார அமைச்சர் நிதின்பட்டேல் அரசு மருத்துவ ஆய்வு மேற்கொண்டார். இங்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருந்து கை இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு பன்றிகாய்ச்சல் இருந்ததாகவும். இவர்களே மருத்துவமனையில் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே குஜராத்தில் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+