கதவை பூட்டிவிட்டு.. தாசில்தார் விஜயாவை தீ வைத்து கொன்ற சுரேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தாசில்தாரை எரித்து கொன்ற டிரைவர் சுரேஷும் பலியானார்
அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: பெண் தாசில்தார் விஜயாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற விவசாயி சுரேஷும் இன்று உயிரிழந்து விட்டார். 65 சதவீத தீக்காயங்களுடன் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்துவிட்டார்.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அப்துல்லாபூர்மேட் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் அங்கு தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி
அதே பகுதியை சேர்ந்த விவசாயியான சுரேஷ். விவசாய நிலம் ஒன்றை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி வருவாய் துறையினர் பட்டா புத்தகம் வழங்கியது பற்றி தாசில்தாரிடம் முறையிட்டார். இது சம்பந்தமாக 15 நாட்களாக தொடர்ந்து தாசில்தார் ஆபீசுக்கு வந்து போய் கொண்டும் இருந்தார்.

பட்டா புத்தகம்
இது தொடர்பாக ஏற்கனவே அப்துல்லாபூர்மேட் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார். ரங்கா ரெட்டி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனினும் ஆனால், தன்னுடைய நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் வழங்கிவிட்டதால் நடவடிக்கை இல்லாததை கண்டு, கடுமையான ஆத்திரம் விஜயா மீது ஏற்பட்டது.

விஜயாரெட்டி
அதனால், 4 நாளைக்கு முன்பு, தாசில்தார் ஆபீசுக்கு மதியம் வந்த சுரேஷ், விஜயா ரெட்டி அறைக்குள் சென்று, கதவை பூட்டிவிட்டு விஜயா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தார். இதில், விஜயா முழுவதுமாக எரிந்து கருகினார். அவரை காப்பாற்ற சென்ற கார் டிரைவருக்கும் தீ பரவி காயம் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை
அதேபோல, விஜயா மீது பற்றிய தீ பக்கத்தில் இருந்த சுரேஷ் மீதும் பற்றியது. 65 சதவிகிதத்துக்கு மேல் சுரேஷ் தீக்காயம் அடைந்து உஸ்மானியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கார் டிரைவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், சுரேஷுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வந்தது.

உயிரிழந்தார்
போலீசாரும் ஆஸ்பத்திரியில் சுரேஷிடம் விசாரணை நடத்தினர். "என் நிலைத்தை இன்னொருத்தர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் தந்துட்டாங்க.. இதுக்கு உதவி செய்யணும்னு பலமுறை அதிகாரிகளை கேட்டுக்கிட்டேன்.. ஆனா தாசில்தார் எனக்கு சரியான பதிலை சொல்லல. அதனாலதான் பிளான் பண்ணி பெட்ரோல் எடுத்துட்டு போய் அவங்க மீது தீ வைத்து கொலை செய்தேன். பின்னர் சரணடைந்து விடுகிறேன்" என்று சிகிச்சையின்போது சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தீவிரமான சிகிச்சை நடந்து வந்தும், சுரேஷ் இன்று உயிரிழந்தார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications