பாஜக, காங்கிரஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள்: கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகரில் உள்ள உத்தம் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வருவார்கள். உங்களுக்கு யாராவது லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள். அந்த இரண்டு கட்சியினரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு துடைப்பம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

49 நாட்களில் எங்களால் லஞ்சத்தை தடுத்து நிறுத்த முடிந்தது என்றால், 7 மாதங்களில் பாஜக அதை செய்திருக்க வேண்டும் இல்லையா என்றார்.
கெஜ்ரிவாலின் பேச்சு டெல்லி மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஷாசியா இல்மி தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளது. கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications