ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எப்போதோ இந்தியாவில் தடை செய்தாகிவிட்டதே.. லோக்சபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதால் புதிதாக அதை தடை செய்ய வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.
லோக்சபாவில் இன்று நடைபெற்ற தீவிரவாதம் தொடர்பான விவாதத்தின்போது பதிலளித்த ராஜ்நாத்சிங் கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆதரவு கிடைக்கவில்லை. ஒரு சில இளைஞர்கள் மட்டுமே அந்த இயக்கத்தின் மீது பற்று வைத்துள்ளனர். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத பாதைக்கு சென்றுவிடாமல் போலீசார் தடுக்க வேண்டியதில்லை, அந்த இளைஞர்களின் பெற்றோரே தடுப்பார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் 33வது இடத்தில் ஐஎஸ்ஐஎஸ் உள்ளது. இந்த அமைப்பு 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட'த்தின்கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் வரும் அமைப்புகளை இந்தியா தனியாக தடை செய்ய வேண்டியதில்லை. ஐக்கிய நாடுகள் எந்த அமைப்பை தடை செய்கின்றனவோ அந்த அமைப்புகள் எல்லாம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலின்கீழ்தான் வரும்.
இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அனுதாபிகள் ஊடுருவதை தடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும். அதன் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications