யார் அது?.. கோடி கோடியாய் பணம்.. ஆப்கன் மத்திய வங்கியில் குவியும் 'டாலர்கள்'.. வெளியான பகீர் தகவல்
ஆப்கன் மத்திய வங்கியில் கோடிக்கணக்கில் பணம் குவிகிறதாம்
காபூல்: ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம், அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... சுமார் 1 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களில் அந்த தொகை இருக்கும் என கூறப்படுகிறது... இதனால் மீண்டும் ஒரு குழப்பமும், பதற்றமும் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.. இதையடுத்து அங்கு புதிய அரசையும் அமைத்துள்ளனர்.. பிரதமராக முல்லா அகுந்த் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.. மற்ற அரசு அதிகாரிகளின் நியமனங்கள் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன..
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல, நாங்கள் இப்போது இருக்க மாட்டோம், எங்களை பார்த்து பயப்பட தேவையில்லை என்று தாலிபான்கள் விளக்கம் தந்தாலும், பெண்களுக்கான சுதந்திரம் அங்கு இல்லை என்பதே தற்போது நிலவி வரும் சூழலாகும்.

பாதுகாப்பு
அதற்கேற்றபடி, பெண்களுக்கெதிரான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி கொண்டிருக்கிறது.. முன்னாள் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.. பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஆப்கனை பற்றி புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தூதரக உறவு
முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கம், அந்நாட்டின் மத்திய வங்கிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதுதான் தற்போது அதிர்ச்சியை கூட்டி வருகிறது... தலிபான்கள் ஆட்சியை நடத்தினாலும், அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்து கொண்டன...

நாணய கொள்கை
பல்வேறு உலக நாடுகள் ஆப்கனை தனிமைப்படுத்திவிட்டன.. இதுவே கடுமையான பொருளாதார நெருக்கடியை அங்கு ஏற்படுத்தி உள்ளது.. ஒருபுறம், மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் உள்ளனர்.. இன்னொரு பக்கம் வேலைவாய்ப்புகளும் இல்லை. இதனிடையே, நாட்டின் நாணய கொள்கை பலவீனமடைந்து வருகிறது. எனவே, தலிபான் அரசாங்கமானது, இப்போதைக்கு வெளிநாட்டு நிதியை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமைதான் உருவாகி உள்ளது..

முதலீடுகள்
ஆகவேதான், சீனாவிலிருந்து பெரிய முதலீடுகளையும், அமெரிக்காவிடம் இருந்து உதவிக்கரத்தையும் தலிபான்கள் நீட்டியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான் ஆப்கனின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து, மத்திய வங்கி மிகப் பெரிய தொகையை கைப்பற்றியிருக்கிறதாம்..
Recommended Video

எப்படி வந்தது?
எப்படியும் 1,23,68,246 டாலர் அவைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த அதிகாரிகளின் வீட்டில் பணம் எப்படி வந்தது? எப்படி கைப்பற்றப்பட்டது? இந்த பணத்தை எப்போது எடுத்தார்கள்? பின்னணி என்ன? என்பது பற்றி எதுவுமே தெரியவில்லை.. ஆனால், மத்திய வங்கியின் பெரிய தொகை மட்டும் இங்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, முன்னாள் அதிபர் மற்றும் அரசு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

பண பரிவர்த்தனை
அதேபோல, மத்திய வங்கியின் ஆளுநராக மாறிய ஹாஜி இத்ரிஸ் என்பவரை, மத்திய வங்கியின் இடைக்கால தலைவராக தலிபான்கள் நியமித்து உள்ளனர்.. ஆனால் இவர் மீது ஏற்கனவே பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது என்பதும், தலிபான்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை செய்தவரே இவர்தான் என்று மாஜி முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications