Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’கலிங்க’ தேசம் ஆளப் போகும் 'தமிழன்’? ஒடிஷாவில் ’பாண்டியன்’ புயல்.. நவீன் பட்நாயக்கின் அடுத்த வாரிசு?

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிஷா மாநில அரசியலில் 'தமிழர் பாண்டியன்' ஐஏஎஸ் தவிர்க்க முடியாத சக்தியாக மையம் கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா, சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அந்த கலிங்க தேசத்தின் 'மாமன்னனாக' மதுரை தமிழர் பாண்டியன் மகுடம் சூடுவாரா? என்பது தெள்ள தெளிவாகிவிடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

ஒடிஷா மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பவர் பிஜூ ஜனதா தளம் தலைவரான முதல்வர் நவீன் பட்நாயக். இன்றைய ஒடிஷாதான் கலிங்கதேசம் என வரலாற்று பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். இன்றைய ஒடிஷாவின் கோரபுட் உள்ளிட்ட மாவட்டங்கள் 'சென்னை மாகாணத்தின்' ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்தவைதான். ஒடிஷாவின் ஆதி குடிகளில் பெரும் எண்ணிக்கையிலானோர் ஆதி தமிழ் பேசும் 'திராவிடர்' பழங்குடிகள்தான். தமிழர் நிலத்துக்கும் ஒட்டார தேசம் அல்லது கலிங்க தேசமான இன்றைய ஒடிஷாவுக்கும் அப்படி ஒரு வரலாற்று பந்தம் நெடுங்காலம் இருந்து வருகிறது.

Tamil Ex IAS officer VK Pandian to become next BJD Chief in Odisha?

நவீன் பட்நாயக் அடுத்த வாரிசு?: ஒடிஷாவில் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு வயது 77. முதுமை மற்றும் உடல்நலன் பாதிப்பு காரணங்களால் நவீன் பட்நாயக்கின் அடுத்த வாரிசு யார்? என்கிற இயல்பான வாதங்கள் ஒடிஷா அரசியலில் எழுந்து கொண்டே இருக்கின்றன. கண்ணுக்கு எட்டியவரையில் நவீன் பட்நாயக்கின் குடுபத்தில் இருந்து புதிய அரசியல் வாரிசு யாரும் வருவதாக இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நவீன் பட்நாயக்கின் அடுத்த அரசியல் வாரிசு என்ற விவாதத்தில் முதல் இடத்தில் இருப்பவர் 'பாண்டியன்' எனும் விகே பாண்டியன். ஆம் தமிழரான விகே பாண்டியன் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் இந்த ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.

மதுரை பாண்டியன் ஐ.ஏ.எஸ்: 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிஷாவில் ஐஏஎஸ் அதிகாரியாக, துணை ஆட்சியராக கால் பதித்தவர் மதுரையை பூர்வீகமாக கொண்ட விகே பாண்டியன் ஐஏஎஸ். ஒடிஷா மாநில நிர்வாகத்தில் அடுத்தடுத்து பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று அதி உச்சமாக, ஒடிஷாவின் நிழல் முதல்வர் என்கிற விமர்சனத்தைப் பெறும் அளவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இவரது மனைவி சுஜாதா ஐஏஎஸ், ஒடிஷாவை சேர்ந்தவர். ஒருவகையில் ஒடிஷாவின் மருமகன் மதுரை பாண்டியன் ஐ.ஏ.எஸ்.

பிஜூ ஜனதா தளத்தை காப்பாற்றியவர்: ஒடிஷா மாநில அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல.. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியிலும் மதுரை பாண்டியன் ஐ.ஏ.எஸ்.கை ஓங்கியது. இந்திய அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் பிளவை சந்திக்காமல் இருந்தது இல்லை. ஒடிஷாவின் அசைக்க முடியாத மக்கள் வலிமை கொண்ட பிஜூ ஜனா தளமும் அப்படி ஒரு பிளவை சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அதனையும் நவீன் பட்நாயக் வெற்றிகரமாக முறியடித்ததின் பின்னணியில் மதுரை பாண்டியன் ஐ.ஏ.எஸ். பங்கு முக்கியமானது என்கின்றனர் ஒடிஷா ஊடகவியலாளர்கள்.

கேபினட் அமைச்சர் அந்தஸ்து: முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து பதவி கொடுத்துள்ளார் நவீன் பட்நாயக். இதனால் ஒடிஷா அமைச்சரவையில் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த நிலை மதுரை பாண்டியன் ஐ.ஏ.எஸ்.தான் என உருவாகி இருக்கிறது. அரசு நிர்வகாத்தை தாண்டி இப்போது அரசியலில் காலடி பதித்துவிட்டார் மதுரை பாண்டியன் ஐஏஎஸ் என்பதையே அவருக்கான இந்த புதிய பதவி மூலம் உறுதி செய்திருக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக். அதே நேரத்தில் தமது அடுத்த அரசியல் வாரிசும் மதுரை பாண்டியன் ஐஏஎஸ் என்பதையே சூசகமாக தெரிவித்திருக்கிறார் நவீன் பட்நாயக் எனவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒடிஷா தேர்தல் களம்: அத்துடன் பிஜூ ஜனதா தளம் ஏற்கனவே பாண்டியன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது; ஆனால் இப்போது பாண்டியன் பெற வேண்டியது மகத்தான வெற்றி; அதுதான் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கும் ஒடிஷா மக்களுக்கும் ஆகப் பெரும் நம்பிக்கையை அவர் மீது உருவாக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதற்கான முதல் வாய்ப்பு 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலும் அப்போது நடைபெறப் போகும் மாநில சட்டசபை தேர்தலும்தான். ஒடிஷாவைப் பொறுத்தவரையில் பிஜூ ஜனதா தளம், பாஜக இடையேதான் போட்டி. தேர்தல் கருத்து கணிப்புகளிலும் ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் கட்சிதான் அதிக இடங்களை வெல்லும் என்கிறது- அது லோக்சபா தேர்தலோ, சட்டசபை தேர்தலோ என்பது திட்டவட்டமான முடிவு.

காத்திருக்கும் அக்னி பரீட்சை: 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 இடங்களில் 114 இடங்களைப் பெற்றது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 74 இடங்கள்தான். அதைப் போல இன்னொரு மடங்கு இடங்களுடன் மாபெரும் வலிமையோடு நிற்கிறது பிஜூ ஜனதா தளம். ஒடிஷா மாநிலத்தை ஒட்டுமொத்த கோட்டையாக வைத்திருக்கும் பிஜூ ஜனதா தளம் இப்போது தமிழரான பாண்டியன் வசமாகிக் கொண்டிருக்கிறது. தமிழரான பாண்டியன் மீது பிஜூ ஜனதா தளம் கட்சியும் ஒடிஷா மக்களும் முழு நம்பிக்கை வைத்துள்ளார்களா? இல்லையா? என்பதை தீர்மானிக்கப் போகும் அக்னி பரீட்சையாக 2024 லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கின்றன ஒடிஷா அரசியல் வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+