ஷாக்கிங்.. அரை நிர்வாணம்.. இடுப்பில் சேலை கட்டி.. குஜராத்தில் அவமதிக்கப்பட்ட "தமிழ் வியாபாரி"
குஜராத்தில் தமிழ் வியாபாரியை அவமானப்படுத்தி உள்ளனர்
காந்திநகர்: தர வேண்டிய பணத்தை தரவில்லையாம்.. அதனால் ஒரு வியாபாரியின் இடுப்பில் சேலை கட்டி உள்ளனர்.. கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டி உள்ளனர்.. அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.. அப்படியே தெரு தெருவா இழுத்து சென்றுள்ளனர் கொடூரர்கள்.. இவ்வளவும் நடந்தது நம் தமிழ்நாட்டு வியாபாரிக்குதான்..!
குஜராத் மாநிலம் சூரத்திற்கு தமிழகத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்றுள்ளார்.. அவருக்கு 55 வயதாகிறது.. ஜவுளிகளை அங்கே சூரத்தில் வாங்கி கொண்டு, இங்கே வந்து விற்பது அவரது வழக்கம்.
அப்படித்தான் நேற்று முன்தினமும் சென்றுள்ளார்... சூரத் முழுக்க துணிக்கடைகள்தான் என்பதால், பல்வேறு கடைகளுக்கு சென்று பர்சேஸில் ஈடுபட்டிருந்தார்..

வியாபாரி
அப்போது ஒருசிலர் அங்கு வந்து, சந்திரகாந்த் ஜெயின் அழைத்து வர சொன்னதாக வியாபாரியிடம் சொல்லி உள்ளனர்.. சந்திரகாந்த் ஜெயின் சூரத்தில் மிகப்பெரிய தொழிலதிபர். நியூ டிடி மார்க்கெட்டில் ஜவுளி கடை வைத்திருக்கிறார்.

ஜெயின்
இதையடுத்து, வியாபாரியை, ஜெயின் கடைக்கு அவர்கள் அழைத்து சென்றனர்.. தமிழ் வியாபாரியை பார்த்ததுமே ஜெயின் கொந்தளித்துவிட்டார்.. ஜவுளி வாங்கிட்டு போன 4 லட்சம் ரூபாய் எங்கே? என்று கேட்டுள்ளார்... திடீரென பணத்தை கேட்கவும் தமிழ் வியாபாரி அதிர்ந்துள்ளார்.. இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லி உள்ளார்.

சேலை
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயின், சட்டையை கழட்டுமாறு வியாபாரியிடம் சொல்லி உள்ளார்.. அவரும் சட்டையை காட்டி இருக்கிறார்.. பிறகு தன் கடையில் இருந்து ஒரு சேலையை எடுத்து, வியாபாரியின் இடுப்பில் கட்டிவிட்டார்.. ஒரு போர்டையும் கழுத்தில் மாட்டி, தமிழ்வியாபாரியை தெரு தெருவாக இழுத்து சென்றுள்ளனர்.. ஜெயினின் கடையில் வேலை பார்த்த ஊழியர்களும் இதற்கு உடந்தை.

வீடியோ
இந்த கொடுமையை அந்த மார்க்கெட்டில் நேரில் பார்த்தவர்கள், ஷாக் ஆகி, வீடியோவும் எடுத்து இணையத்தில் பதிவிட்டு விட்டனர்.. அந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கு சென்றுள்ளது.. இதையடுத்து தொழிலதிபர் சந்திரகாந்த் ஜெயின், அவரது கடை ஊழியர்கள் சிவா, சோகம் ஆகிய 3 பேரைம் கைது செய்துள்ளனர்.

விசாரணை
ஆனால் இவ்வளவு நடந்தும், தமிழ் வியாபாரி போலீசாரிடம் எதுவுமே சொல்லவில்லையாம்.. ஜெயினுக்கு எதிராக புகாரும் தரவில்லையாம்.. சாலபத்பூரா போலீசாரே நடந்ததையெல்லாம் அங்கிருந்தோரிடம் விசாரித்து, வீடியோ ஆதாரத்தையும் முன்வைத்து, தாமாகவே வழக்கு பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. வடநாட்டில் தமிழ் வியாபாரியை அரைநிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications