ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழக ஆளுநர் (பொறுப்பு )வித்யாசாகர் ராவ் இன்று மாலை சந்தித்து பேசினார்.
டெல்லி: டெல்லியில் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழக ஆளுநர் (பொறுப்பு )வித்யாசாகர் ராவ் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க துணை ராணுவப் படையை அனுப்பியது மத்திய அரசு. இதனிடையே மறைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீசார் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று பாராட்டு தெரிவித்திருந்தார். அதேநேரம் சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லி சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங்கிடம் வித்யாசாகர் ராவ் விளக்கியதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications