கர்நாடகம் திறந்து விடாவிட்டாலும்.. தமிழகத்திற்கு 14,000 கன அடி நீர் போயிருக்கிறது.. எப்படி?
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதில்லை என்று கர்நாடக அரசு முடிவெடுத்து அணைகளை மூடி வைத்துள்ள நிலையிலும் கூட கர்நாடகத்திலிருந்து தமிழக காவிரி ஆற்றில் 14,000 கன அடி நீர் வரை போயிருக்கிறது. இயற்கையே மழை ரூபத்தில் தமிழகத்திற்கு இப்படி உதவியிருக்கிறது.
இப்படி வந்துள்ள மழையை சுப்ரீம் கோர்ட்டில் கணக்குக் காட்டி நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளோம் என்று கணக்கு காட்டவுள்ளதாம்.
செப்டம்பர் 27ம் தேதி வரை அதாவது இன்று வரை தமிழகத்திற்கு தினசரி 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி அணையை மூடி விட்டது கர்நாடகா. மேலும் சட்டசபையைக் கூட்டி தீர்மானமும் போட்டு விட்டது. இப்போது உச்சநீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக் கொள்ள காத்திருக்கிறது.

14,000 கன அடி நீர்
இருப்பினும் கடந்த ஐந்து ஆறு நாட்களில் தமிழகத்திற்கு 14,000 கன அடி நீர் வரை போயிருக்கிறதாம். இது கர்நாடகத்திலிருந்து போயுள்ளது. எப்படி என்றால் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு கீழ்ப்புறப் பகுதிகளில் மழை பெய்ததால் அந்தத் தண்ணீர் தமிழகத்திற்குப் போயுள்ளது. அதைத் தடுத்து வைக்க கர்நாடகத்திடம் அணை எதுவும் இல்லை என்பதால் இவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை.

கணக்குக் காட்ட முடிவு
இருந்தாலும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு வரும்போது எங்களால் முடிந்தவரை தண்ணீிர் கொடுத்து விட்டோம். முடியாத நிலையிலும் கூட தண்ணீர் கொடுத்துள்ளோம் பாரீர் என்று கணக்குக் காட்டவும் திட்டமிட்டுள்ளனராம்.

தினசரி சராசரியாக 2000 கன அடி
காவிரியில் கர்நாடகம் திறந்து விடும் தண்ணீரின் அளவு பிலிகுண்டுலுவில்தான் தமிழகத்தால் கணக்கிடப்படும். அங்கு திங்கள்கிழமை வரை சராசரியாக தினசரி 2000 கன அடி நீர் வரை வந்துள்ளதாம். கர்நாடகம் தனது அணையிலிருந்து தண்ணீரை நிறுத்தி வைத்துள்ள போதிலும் கூட இதுவரை 14,000 கன அடி நீர் வரை போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

குறைந்த காற்றழுத்தம் காரணமாக
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காறணமாக தெற்கு உட்புறக் கர்நாடகத்தில் கடந்த வாரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்திலிருந்து காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் வந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த மழையால் தமிழகத்திற்குத்தான் ஓரளவு லாபம் கொடுத்துள்ளது.

அதிகபட்சம் செப்டம்பர் 21ல்
பிலிகுண்டுலு கணக்குப்படி, செப்டம்பர் 21ம் தேதி விநாடிக்கு 5882 கன அடி நீர் வந்துள்ளது. 22ம் தேதி 3042, 23ம் தேதி 2496 கன அடி நீர் வந்துள்ளதாம். சராசரியாக ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 கன அடி நீர் வரை வந்துள்ளதாம்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications