• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுலுடன் கைகோர்த்த டிஎம் கிருஷ்ணா.. சூடுபிடிக்கும் பாரத் ஜோடோ யாத்திரை! காங்கிரசின் மாஸ் 'மூவ்'

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் 87வது நாளாக ராகுல் காந்தி 'பாரத் ஜடோ யாத்திரை' மேற்கொண்டிருந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா இந்த பேரணியில் பங்கேற்றிருந்தார்.

எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி தேச ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜடோ யாத்திரை) கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார்.

இப்பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களை கடந்து டிசம்பர் 3ம் தேதி மத்தியப்பிரதேசத்தில் நுழைந்தது.

ஒரு வார்த்தை கூட சொல்லாத எடப்பாடி.. குறுக்கே புகுந்த ஸ்டாலின்.. பட்டென பேசி.. இதுதான் ராஜதந்திரம்! ஒரு வார்த்தை கூட சொல்லாத எடப்பாடி.. குறுக்கே புகுந்த ஸ்டாலின்.. பட்டென பேசி.. இதுதான் ராஜதந்திரம்!

டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணா

மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தின் மஹுதியா கிராமத்தில் இருந்து காலை 6 மணிக்கு 87வது நாள் நடைப்பயணம் தொடங்கியது. இப்பயணத்தில் 'கம்ப்யூட்டர் பாபா' எனப்படும் நம்தியோ தாஸ் தியாகி பங்கேற்றார். இவர் சாமியார் மட்டுமன்று கடந்த காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் இருந்தபோது அமைச்சராகும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இந்த நடைப்பயணம் களைக்கட்ட தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து டி.எம்.கிருஷ்ணா பேரணியில் பங்கேற்றார். நடைப்பயணத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே முற்போக்கு இயக்கங்களில் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்து பங்கேற்று வந்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக இந்த நடைப்பயணத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்.

யாத்திரை

யாத்திரை

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது வரை சுமார் 2,500 கி.மீ தொலைவு பயணித்து டிசம்பர் 4ம் தேதியான நேற்று ராஜஸ்தானில் நுழைந்துள்ளது. இன்னும் 1,100 கி.மீ தொலைவு மீதம் இருக்கிறது. இப்பயணம் இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் நிலையில், தேர்தல் வரை என்ன செய்வது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று டெல்லியில் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்று கலந்துரையாடினர். இறுதியில், பாரத் ஜடோ யாத்திரைக்கு பிறகு கட்சி சார்பில் மீண்டு ஒரு நடைப்பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இப்பயணத்திற்கு 'ஹாத் சே ஹாத் ஜோடோ' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாரத் ஜடோ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறுகிறது. ஆனால், 'ஹாத் சே ஹாத் ஜோடோ' கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும். இதில் ராகுல் காந்தியும் பங்கேற்றிருப்பார் என்றும், பாரத் ஜடோ யாத்திரையில் பெற்ற அனுபவங்களை இதில் அவர் பகிர்ந்துகொள்வார் என்றும் கட்சி தலைமை கூறியுள்ளது. இப்பயணத்தை இரண்டு மாத காலமாக திட்டமிட்டிருக்கும் காங்கிரஸ், தேர்தல் நெருக்கமாக வருவதால் கட்சியின் வாக்கு வங்கியை இது இரட்டிப்பாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்

முன்னதாக கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பங்கேற்றிருந்த 87வது நாள் நடைப்பயணத்தின் இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையுயர்வு குறித்து மத்திய பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதிலும் ஏன் இந்தியாவில் எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை? என்று கேள்வியெழுப்பிய அவர், பாரத் ஜடோ யாத்திரை என்பது பிரதமரின் கொள்கை தந்திரத்திற்கு எதிரான லோக தந்திரத்தின் குரல் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
While Rahul Gandhi was on the 87th day of 'Bharat Jado Yatra' in Madhya Pradesh's Agar Malwa district, famous Carnatic musician DM Krishna from Tamil Nadu participated in this rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X