தேசிய மொழி இந்தியை கற்றுக்கோங்க.. தமிழ்நாட்டு பயணியிடம் ஏர்போர்ட்டில் சிஐஎஸ்எப் வீரர் அடாவடி
கோவா: கோவா விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயணியிடம், இந்தி தெரியாத காரணத்தால் கேலி செய்யும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண்ணிடம் இந்தி தெரியாதா என கோபப்பட்டு பேசிய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர், இந்தி தேசிய மொழி என்றும் இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் எனவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னையை சேர்ந்தவர் ஷர்மிளா ராஜசேகர் (வயது 34) . கோவாவில் சுற்றுலா சென்றுவிட்டு தனது 3 வயது மகளுடன் சென்னை திரும்பிய ஷர்மிளா லக்கேஜ் தாபோலிம் விமானநிலையத்தில் செக் இன்-ற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த மத்திய தொழில்படை பாதுகாப்பு வீரர் மற்றொரு டிரேவை எடுக்குமாறு இந்தியில் கூறியுள்ளார். ஆனால், இந்தியில் கூறியதால் ஷர்மிளாவுக்கு புரியவில்லை.
பின்னர் சி.ஐ.எஸ்.எப் வீரரிடம் தனக்கு இந்தி தெரியாததால் நீங்கள் சொன்னது புரியவில்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே ஷர்மிளாவை கேலி செய்த பாதுகாப்பு படை வீரரோ, எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வருவதாக ஷர்மிளா பதில் அளித்துள்ளார். உடனே குறுக்கிட்ட அவர், தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது.
இந்தி என்பது தேசிய மொழி, எனவே கண்டிப்பாக அதை கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். எனினும், இந்தி என்பது தேசிய மொழி கிடையாது. அலுவல் மொழி மட்டுமே என ஷர்மிளா கூறியுள்ளார். இது குறித்து ஷர்மிளா கூறுகையில், நான் நடத்தப்பட்ட விதம் மிகவும் மனிதாபிமானமற்றது மற்றும் கலாச்சார ரீதியாகவும் உணர்வுபூர்வமற்றது" என்று கூறியுள்ளார்.
கோவா விமான நிலையத்தில் தமிழக பெண்ணிடம் தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை கூறி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications