குஜராத்: இந்தியா- பாக். எல்லையில் சந்தேக நடமாட்டம்- பாக். வரைபடத்துடன் தமிழக இளைஞர் அதிரடி கைது!

Subscribe to Oneindia Tamil

கட்ச்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியதாக தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தின் கட்ச் மாவட்டமானது பாகிஸ்தானுடன் எல்லைகளை கடல்வழியாகவும் சதுப்பு நிலம் வழியாகவும் கொண்டது. இப்பகுதியில் நேற்று மாலை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பையுடல் லோத்ரானி என்ற கிராமத்தை நோக்கி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

Tamil Nadu youth arrested near India-Pakistan border in Gujarat

எல்லை பாதுகாப்பு படையினரிடம் அந்த இளைஞர் தெளிவான தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை. பின்னர் அவரது பையை பறிமுதல் செய்து பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அதில் பாஸ்போர்ட், இந்தியா- பாகிஸ்தான் எல்லை கிராம வரைபடங்கள், பாகிஸ்தானின் நாகர்பார்கர், இஸ்லாம்கோட் கிராம வரைபடங்கள், ஸ்குரூ டிரைவர், ஸ்பேனர், கத்திரி கோல்கள், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, சர்வதேச ஏடிஎம், டெபிட் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதனடிப்படையில் எல்லை பாதுகாப்பு படையிடம் பிடிபட்ட நபர், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் சேமித்து வைத்து சாப்பிடக் கூடிய உணவுகள், மும்பையில் இருந்து சுரேந்தர்நகர் பயணத்துக்கான ரயில் டிக்கெட் மற்றும் ரூ10,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு படையினரிடம் தாம் ஏன் எல்லைப் பகுதியில் நடமாடினேன் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்காத காரணத்தால் தினேஷ் லட்சுமணன் தேவர் என்ற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிடிபட்டுள்ள தினேஷ் லட்சுமணன் தேவர், போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா? அல்லது தீவிரவாத இயக்கங்களின் ஸ்லீப்பர் செல்லா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்குள் கட்ச் எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தலும் தீவிரவாதிகள் ஊடுருவலும் தொடருவது பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+