கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு
ஹைதராபாத்: தூத்துக்குடி எம்பியாக கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்திரராஜன் சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுகவின் வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டார். இந்த நிலையில் தமிழிசை தோல்வி அடைந்தார்.
தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழியின் வேட்புமனுவில் அவரது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்திரராஜனும், அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தானகுமாரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்காளர்
அந்த மனுவில் ஒரு வேட்பாளரின் விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு ரூ 2 ஆயிரம் வழங்கியதும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 18-ஆம் தேதி வாக்காளர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

23-ஆம் தேதி விசாரணை
அப்போது தமிழிசை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர் தரப்பில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தனியாக தொடர்ந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து பட்டியலிடுமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இரு வழக்குகளிலும் கனிமொழி உள்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை 23-ஆம் தேதி ஒத்திவைத்தார்.

தமிழிசை அறிவிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனிடையே கனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன்.

அக்டோபரில் முடிவு
வழக்கை வாபஸ் பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளேன். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். வழக்கை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து அக்.14-இல் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications