மோடி பேச்சை கேட்காமல் எடப்பாடி செய்த செயலை பார்த்தீங்களா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்துள்ளார்.

சமீபத்தில் உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் எழுதிய கடிதத்தில், பிரதமர் மோடிக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்க வேண்டாம் எனவும், அதற்கு பதில் காதியால் ஆன கைக்குட்டைகள், புத்தகங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதனை அனைத்து மாநிலங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tamilnadu CM Edappadi Palaisamy present flower bouquet to PM Modi

‛மான் கி பாத்' நிகழ்ச்சியிலும் மோடி, பூங்கொத்துகளை தவிர்த்து கைக்குட்டைகளையும், புத்தகங்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரை சந்தித்தபோது பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து கூறினார்.

ஆனால், பூங்கொத்து கொடுக்கப்பட்டதை மோடியும் தட்டிக்கழிக்காமல் ஏற்றுக்கொண்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu CM Edappadi Palaisamy present flower bouquet to PM Modi who has the habit of avoiding bouquet.
Please Wait while comments are loading...