மோடியின் கவனத்தை ஈர்க்க ருத்ராட்சை அணிந்து விவசாயிகள் போராட்டம்.. திமுக எம்பி கனிமொழி நேரில் ஆதரவு
பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க ருத்ராட்சை மாலை அணிந்து டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக விவசாயிகள் ருத்ராட்சை மாலை அணிந்து இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடும் வெயில் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் வயது முதிர்ந்த நிலையிலும் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகளை சந்திக்க மறுப்பு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி இதுவரை அவர்களை சந்திக்கவில்லை. சந்திக்கவும் மறுத்து வருகிறார்.

விதவிதமாக போராட்டம்..
தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளை எட்டியுள்ளது. நாள்தோறும் அரை நிர்வாணத்தோடு எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, பிச்சையெடுப்பது என விதவிதமாக தங்களின் போராட்டத்தை கொண்டுசெல்கின்றனர்.

ருத்ராட்சை அணிந்து சாமியாரைப் போல்..
அந்த வகையில் இன்று கழுத்தில் ருத்ராட்சை மாலை அணிந்து சாமியாரைப் போல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு ருத்ராட்சை மாலை அணிந்து போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக எம்பிக்கள் ஆதரவு
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது விவசாயிகளுக்கு திமுக சார்பில் ஆதரவு தெரிவித்த அவர்கள், விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications