உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய கர்நாடகா மீது ஆர்டிகிள் 142-ன் கீழ் நடவடிக்கை.. தமிழக அரசு வாதம் இதுதான்!
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

சேகர் நாப்தே, தனது வாதத்தில், காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை கர்நாடகா மீறியுள்ளது. ஆர்டிகிள் 142-ன் கீழ் கர்நாடகா மீது சுப்ரீம்கோர்ட் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை ஆரம்பம் முதலே கர்நாடகா மதிக்கவில்லை. தொடக்கம் முதலே காவிரியிலிருந்து குறைந்த அளவு தண்ணீரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுவந்தது. பெங்களூர் காவிரி பாசன பகுதி கிடையாது. எனவே, பெங்களூருக்கு குடிநீர் வழங்க சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சரியல்ல என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கர்நாடக தரப்பு வாதத்தை கேட்காமலே எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, அவர்கள் வாதிடட்டும் என கூறி கர்நாடக தரப்பு வழக்கறிஞர் நாரிமனை வாதிட நீதிமன்றம் அனுமதித்தது.
நாரிமனோ, கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் நோக்கம் இல்லை என்றும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கர்நாடக அரசு சட்டசபையில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மழை பெய்தால் நவம்பர் இறுதிக்குள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவோம் என்றார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.
கர்நாடக எம்.பிக்களான சந்திரப்பா, முத்த ஹனுமே கவுடா, சுரேஷ் கவுடா, பிரகாஷ் ஹுக்கேரி, ராஜிவ் கவுடா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் அமர்ந்து வழக்கை நேரில் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை வேண்டுமென்றே மீறுவோருக்கு எதிராக ஆர்டிகிள் 142-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications