அனுமதி மறுக்கப்பட்டும் பெங்களூரில் போராட்டம் நடத்திய தமிழர்கள் #Jallikattu
பெங்களூரு: அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் பெங்களூர் தமிழர்கள் அல்சூர் தமிழ்ச் சங்கம் முன்பு இன்று அமைதியான முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூர் அல்சூர் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தமிழர்கள் இன்று காலை தமிழச் சங்கம் முன்பு கூடினர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தானே என்று வீட்டில் இல்லாமல் காலையிலேயே போராட வந்துவிட்டனர்.

போராட்டம்
அனுமதி இல்லாததால் அவர்கள் சாலையோரம் உள்ள நடைபாதையில் நின்று அமைதியான முறையில் போராடினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் பிடித்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தானே வேண்டுமே தவிர தற்காலிக தீர்வான அவசர சட்டம் தேவையில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர தீர்வு
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், நான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊருக்கு பக்கத்து ஊருக்காரன். ஜல்லிக்கட்டு என்றால் தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்கு தெரியும். ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

அவசர சட்டம்
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்பதால் இதனால் என்ன பயன்? அவசர சட்டம் தீர்வாகாது. இது எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு நிரந்தர தீர்வு மட்டுமே வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றொருவர் தெரிவித்தார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications