For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் காங். எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட், அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு.. பெங்களூரில் பரபரப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக 44 எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பெங்களூரு ரிசார்ட் மற்றும் கர்நாடக மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரும் 8ம் தேதி குஜராத் மாநிலத்தில் ராஜ்ய சபா எம்பி தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள ஈகிள் கோல்ப் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tax raids at resort where Guj MlAs are lodged in Karnataka

இந்தச் சொகுசு ரிசார்ட்டில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடியான ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும், அம்மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஐடி துறையினர் மூலம் ரெய்டு நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
The Income Tax department is conducting raids at the resort in which the Gujarat MLAs are staying near Bengaluru, Karnataka. Raids are also being conducted at the residence of Karnataka minister, D K Shivakumar's residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X