நாசிக் டிசிஎஸ் மதமாற்ற வழக்கு.. முக்கிய குற்றவாளி நிதா கான் ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணை
நாசிக்: நாசிக் டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை மற்றும் மதமாற்ற கட்டாயப்படுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கில் நிதா கான் மற்றும் போலீஸ் தரப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
டாடா கல்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளையில் ஊழியர்கள் சிலர் தங்களுக்கு கீழ் பணியாற்றும் நபர்களுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் மதமாற்றம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் கூறுகையில், எங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய தவுசிப் பிலால் அத்தர் என்ற சீனியர் ஊழியர் என்னுடன் நட்பாக பழகினார். பின்னர் ரம்ஜான் பண்டிகைக்காக தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். நான் சென்றபோது எனக்கு முதலில் சேமியா பாயாசம் வழங்கினர். அதை சாப்பிட்டதும், போதைப் பொருள் சாப்பிட்டது போல் குழப்பமான மனநிலைக்கு சென்றேன்.
எனது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்த தவுசிப், அவற்றை பில்லி சூனியம் மூலம் சரி செய்து விடலாம் என கூறினார். பின்னர் எனக்கு குல்லா அணிவித்து படம் பிடித்து, அந்த போட்டோவை அலுவலக நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றினார்.
என்னுடன் நட்பாக பழகினாலும், எனது பணித் திறன் மோசமாக இருப்பதாக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி, என்னை நிலைகுலைய செய்து, நான் அவர்களை எப்போதும் சார்ந்திருக்கும்படியான நிலைக்கு கொண்டு வந்தார் எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி தவுசிப் பிலால், அத்தர், டேனிஷ் ஷேக், ஷாருக் உசேன், ரஷா ரஃபிக் மேமன் ஆகியோரை மும்பை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மதமாதற்றத்துக்கு குல்லா வாங்கிய கடை, அசைவ உணவு சாப்பிட்ட ஓட்டல் ஆகியவற்றில் ஆதாரங்களைத் திரட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், டேனிஷ் ஷேக்கின் செல்போன் பாஸ்வேர்டுகள், முக அடையாளம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்துக்கு அவரை அழைத்துச் சென்று செல்போன் ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தில் ஆபரேஷன்ஸ் மேனேஜராக வேலை பார்த்த நீடா கான் மட்டும் தலைமறைவாக உள்ளார். 2 மாத கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி கடந்த சனிக்கிழமை நாசிக்கிலுள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பினரும், புகார்தாரரும் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நீடா கானை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications