‘குரு உத்சவ்’ என்பது ஒரு கட்டுரை போட்டி தான்: எதிர்ப்புகளைத் தொடர்ந்து இரானி பல்டி
டெல்லி: குரு உத்சவ் என்பது ஒரு கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு தான் என்றும், ஆசிரியர் தினத்தை அப்பெயரில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு நிர்ப்பந்திக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி.
வரும் வெள்ளிக்கிழமை, அதாவது செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தினத்தில் "குரு உத்சவ்" கொண்டாடப் பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு மத்திய மனித வள ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப் பட்டது.

ஏற்கனவே, மத்தியில் புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்னும் பெயரில் கொண்டாடப்படுவதற்கு பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் பாமக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கூட இந்த விவகாரத்தை விமர்சித்தன.
இந்நிலையில், இன்று இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி. அதில் அவர், ‘குரு உத்ஸவ் என்பது ஒரு கட்டுரைப் போட்டி மட்டுமே' என அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications