ஃபுல் போதையில் 9-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்.. தற்கொலைக்கும் முயற்சி
Recommended Video

கர்னூல்: தன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்னூல் பங்காருபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக வேலை செய்பவர் சங்கர்.
அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு இந்தி ஆசிரியர் சங்கர் சில மாதங்களாக தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் சங்கரை காதலிக்க மாணவி மறுத்துவிட்டார்.
[ஏமாற்றியதை தாங்க முடியலை.. அதான் குத்தி கொன்னுட்டேன்.. ஆசிரியையை கொன்றவர் பரபர வாக்குமூலம் ]

மிரட்டல்
எனினும் மாணவியின் பின்னால் சுற்றுவதை ஆசிரியர் கைவிடவில்லை. அந்த மாணவி தன் பின்னால் வந்தால் தந்தையிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.
|
கழுத்தை அறுத்த ஆசிரியர்
இதனால் ஆவேசம் அடைந்த சங்கர் இன்று காலை முழு குடிபோதையில் மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அப்போது தன்னை காதலிக்குமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவி மறுத்தார்.

பிளேடால் அறுப்பு
இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அந்த மாணவி கெஞ்சியும் விடாமல் அந்த மாணவியின் கழுத்தை கதற கதற ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்தார்.

தற்கொலைக்கு முயற்சி
மாணவியின் கூக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டனர். அதே நேரத்தில் ஆசிரியர் சங்கர் தன்னிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சேர்ப்பு
தற்கொலை முயற்சியிலிருந்து ஆசிரியரையும் மீட்ட பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதிர்ச்சி
தகவல் அறிந்து விரைந்து சென்ற கர்னூல் போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டுள்ளனர். மேலும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இப்படி மாணவி மேல் காதல் கொண்டு அவரது கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications