ஏமாற்றியதை தாங்க முடியலை.. அதான் குத்தி கொன்னுட்டேன்.. ஆசிரியையை கொன்றவர் பரபர வாக்குமூலம்
டீச்சர் என்னை ஏமாற்றியதால் கொன்றேன் என கொலையாளி தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவிடைமருதூர்: "நம்மை யாருமே பிரிக்க முடியாது என்றாள்... அதை நம்பினேன்... ஆனால் என்னை ஏமாற்றிவிடவும்தான் ஆத்திரம் தாங்காமல் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்தேன்" என்று ஆசிரியையை கொன்ற இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி முடிந்ததும் கொலையுண்ட டீச்சர் ஒருவரது பைக்கில் உட்கார்ந்து போனதான சிலர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த இளைஞரை டீச்சர் குடும்பத்தில் காட்டி, இளைஞரை யார் என்று கேட்டனர்.

கொலையாளி சிக்கினார்
அதற்கு அவர்கள், உறவினர்தான் என்றும், வசந்தபிரியாவின் அத்தை மகன் நந்தகுமார் என்றும் சொன்னார்கள். பின்னர் நந்தகுமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அத்துடன் டீச்சரின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டதில் நந்தகுமார்தான் டீச்சரிடம் அதிக முறை பேசி இருந்திருக்கிறார் என்பதும், இருவரும் லவ் பண்ணி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து கொலையாளி நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது நந்தகுமார் போலீசாரிடம் கூறியதாவது:
[திருவிடைமருதூர்.. துடிக்க துடிக்க நடு ரோட்டில் ஆசிரியையை கொன்ற நபர் சிக்கினார்!]

யாரும் பிரிக்க முடியாது
"நாங்கள் 2 பேரும் ரொம்ப வருஷமாகவே லவ் பண்ணிட்டு இருந்தோம். ஆனா எனக்கு எந்த வேலையும் சரியா அமையவே இல்லை. இதனால் வேலை வெட்டி இல்லாதவனுடன் பழக கூடாது என்று அவர்கள் வீட்டில் எங்கள் காதலுக்கு தடை போட்டு விட்டார்கள். ஆனாலும் வசந்தபிரியா என்னிடம், "நம்மை யாரும் பிரிக்க முடியாது... நாம் கல்யாணம் கண்டிப்பா செய்துக்கலாம்" என்றாள்.

ஒதுங்க ஆரம்பித்தாள்
அவளது வார்த்தைகள்தான் இவ்வளவு நாள் எனக்கு ஆறுதலாக இருந்தது. அவள் சொன்னது அனைத்தையும் நம்பினேன். ஆனால் கொஞச நாளாகவே என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தாள். என்னால் அதை தாங்கவே முடியவில்லை. இதனிடையே அவளுக்கு வீட்டில் வேறு ஒரு இடத்தில் நிச்சயமும் ஆகிவிட்டதை கேள்விப்பட்டேன். இது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

காவிரிக் கரையில்...
அதனால் வசந்த பிரியாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி அவளை தனியாக பைக்கில் அழைத்து சென்றேன். காவிரிக்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். "நீ இல்லாமல் இருக்க முடியாது... கல்யாணம் செய்துக்கலாம்" என்றேன். அதற்கு அவள் மறுத்துவிட்டாள். அந்த கோபத்தில்தான் கையிலிருந்த கத்தியால் அவளை அறுத்துவிட்டேன்". இவ்வாறு நந்தகுமார் போலீசாரிடம் தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications